சாம்பியன்ஷிப் போட்டி வெள்ளி வென்றார் இந்தியாவின் ஸ்ரீகாந்த்

26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் நடைபெற்றது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ ஆகியோர் மோதினர். இதில் சிங்கப்பூர் வீரர் லோ கியான் 21-15, 22-20 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்ந்தை வீழ்த்தி பட்டம் வென்றார்.இறுதிப்போட்டியில் தோற்றதால் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ஸ்ரீகாந்த் கிதம்பி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *