இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 96 ரன்னும், அஸ்வின் 61 ரன்னும், அனுமான் விஹாரி 58 ரன்னும் எடுத்தனர். 100-வது டெஸ்டில் ஆடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி 45 ரன் எடுத்தார்.
7-வது வீரராக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 175 ரன் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார்.இந்நிலையில், 1986-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 7-வது வீரராக களமிறங்கி 163 ரன் எடுத்த கபில்தேவ் சாதனையை ஜடேஜா நேற்று முறியடித்தார்.மேலும், ரவீந்திர ஜடேஜா ரிஷப் பண்ட், அஸ்வின் மற்றும் ஜெயந்த் சின்ஹா ஆகியோருடன் இணைந்து 100 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் மூன்று 100 ரன் பார்ட்னர்ஷிப்களில் அங்கம் வகித்த முதல் வீரர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார்.