இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து,இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் இன்று நடை பெற்ற மூன்றாம் நாள் முடிவில் 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணி வீரர்கள் தேம்பா பவுமா 52 ரன்கள், டி காக் 34 ரன்கள் எடுத்தனர்.
இந்திய தரப்பில் முகமது சமி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர்.இந்திய அணி 130 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.