பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.இந்நிலையில், விக்ரம் படப்பிடிப்பிற்காக பெங்களூரு சென்றிருக்கும் கமல்ஹாசன் அங்கு, இன்று காலை புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்கு சென்று, புனித் ராஜ்குமாரின் மனைவி மற்றும் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். கமல் ஹாசனுடன் நடிகரும் இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் உடன் சென்றிருந்தார்.