நடிகர் விஜய்யுடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.நடிகர் விஜய் தற்போது ’பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 65-வது படமான இதை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார் என்று பதிவு செய்து வருகிறார்கள்.