200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ந் தேதி 50 சதவீத இருக்கைகளுடன் வெளியான படம் மாஸ்டர். இப்படம் வசூலில் பல்வேறு சாதனை படைத்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வாரத்திலேயே 100 கோடி வசூலை கடந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் உலகளவில் 200 கோடி வசூலை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் படம் வசூலில் சாதனை படைத்து வருவது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *