விடுதலையான பேரறிவாளனை கட்டியணைத்து வரவேற்ற முதலமைச்சர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை கேட்டதும் பேரறிவாளன் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் விருந்தினர் அறையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை 05.00 மணியளவில் பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, பேரறிவாளனை கட்டியணைத்து வரவேற்ற முதலமைச்சர், அவரை தனது இருக்கைக்கு அருகில் அமர வைத்து சிறிது நேரம் பேசினார். தனது விடுதலைக்காக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றித் தெரிவித்து முதலமைச்சரிடம் பேரறிவாளன் வாழ்த்துப் பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *