இசைக் குயில் என்று புகழப்பெற்ற இந்தியாவின் பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலமானார் . அவருக்கு வயது 92. லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 8-ந்தேதி அவர் தென் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தொற்று பாதிப்பு லேசாகவே காணப்பட்டது. ஆனாலும் வயது மூப்பின் காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் காணப்பட்டதால் கடந்த 29-ந் தேதி அவர் வெண்டிலேட்டரில் இருந்து மாற்றப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்தனர்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினார்கள். இந்தநிலையில் நேற்று மீண்டும் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் இன்று காலை லதா மங்கேஷ்கர் மரணம் அடைந்தார். ஒரு மாதமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது.
இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு ஒரு வீடியோ பதிவின் மூலம் அவருடைய அஞ்சலியை உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
Heartbroken, but blessed to have known her & for having worked with her.. loved this incredible voice & soul… Lataji holds a place in our hearts that is irreplaceable…. That’s how profoundly she has impacted our lives with her voice. pic.twitter.com/HEAWKaUTZs
— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 6, 2022