வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழக ஆளுநர் ரவி மற்றும் இனிய நண்பர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, ஒ. பன்னீர் செல்வம், அண்ணாமலை, டி.கே. ரங்கராஜன், வைக்கோ, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், திருநாவுக்கரசு, ஏ.சி. சண்முகம்,தொல் திருமாளவன், சீமான் மற்றும் மத்திய, மாநில முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், நண்பர்கள், அதிகாரிகள், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் கமல்ஹாசன், இளையராஜா, வைரமுத்து, ஷாருக்கான், அக்‌ஷய் குமார், மோகன்லால், மம்மூட்டி, சிவராஜ்குமார், சரத்குமார், உதயநிதி ஸ்டாலின், தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் திரையுலகத்தை சார்ந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. விளையாட்டு மற்றும் பல துறைகளிலிருந்து எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த சச்சின் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், பொது மக்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *