நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 175 ரன்கள் எடுத்தது வங்காளதேசம்

 நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட்மாங்கானுவில் நேற்று தொடங்கியது.முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய முதல் நாள் நேர ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து இருந்தது.கன்வாய் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். புத்தாண்டில் செஞ்சுரி அடித்து சாதித்தார். அவர் 122 ரன்னும், வில்யங் 52 ரன்னும் எடுத்தனர். ஹென்றி நிக்கோலஸ் 37 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது.நியூசிலாந்து அணி 108.1 ஓவர்களில் 328 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. நிக்கோலஸ் 75 ரன்கள் எடுத்து கடைசியாக ஆட்டம் இழந்தார்.வங்காளதேசம் அணி தரப்பில் ஷோரிப்புல் இஸ்லாம், ஹசன்மிராஸ் தலா 3 விக்கெட்டும், மொமினுல்ஹக் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.பின்னர் வங்காளதேசம் முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர் ஷாத்மன் இஸ்லாம் 22 ரன்னில், வாக்னர் பந்தில் ஆட்டம் இழந்தார்.

2-வது விக்கெட்டான ஹசன்- நஜிமுல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அபாரமாக விளையாடி அரை சதத்தை தொட்டனர். 55 ஓவர்வீசி முடிக்கப்பட்ட பிறகு வங்காளதேசம் 1 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து இருந்தது.இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது. மஹ்முதுல் ஹசன் ஜாய் 70 ரன்னிலும் மொமினுல் ஹக் 8 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *