google.com, pub-8432884352946851, DIRECT, f08c47fec0942fa0 இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் – இந்தியா 223 ரன்களுக்கு ஆல் அவுட் – கன்னித்தமிழ் உலகச் செய்திகள்

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் – இந்தியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல். ராகுல் 12, மயங்க் அகர்வால் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா, விராட் கோலி ஜோடி நிதானமாக ஆடியது. புஜாரா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தவுடன் அடுத்து வந்த ரஹானே 9, ரிஷப் பண்ட் 27, அஸ்வின் 2, ஷர்துல் தாகூர் 12, பும்ரா 0, முகமது சமி 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.நிதானமாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 201 பந்துகள் ஆடி 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி இந்த முறையும் சதம் அடிக்கும் வாய்ப்பை பக்கத்தில் வந்து இழந்தார். உமேஷ் யாதவ் 4 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா 4, மார்கோ ஜேன்சன் 3, ஆலிவியர், நிகிடி, கேஷவ் மகராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.தற்போது வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *