அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவருக்கு வழக்கமான உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும். இந்நிலையில், அதிபருக்கான அதிகாரத்தை குறுகிய நேரத்திற்கு மட்டும் துணை அதிபர் கமலா ஹாரிசிடம் அதிபர் ஜோ பைடன் ஒப்படைத்து உள்ளார் என்ற தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது கடந்த ஜனவரியில் அதிபராக பதவி ஏற்றபின் ஜோ பைடன் குடல் பரிசோதனை செய்யவில்லை. இதையடுத்து இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சோதனைகளுக்காக ஜோ பைடனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அவர் மயக்க நிலையில் இருப்பதால் சட்டப்படி சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் சான்று அளிக்கும் வரை அவர் அதிபராக இருக்க முடியாது. அமெரிக்க விதிகளின்படி அதிபர் பதவியை வகிக்க உடல் ரீதியாகவும் தகுதியாக இருக்க வேண்டும். சுயநினைவோடு இருக்க வேண்டும். இதனால் அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பும் வரை அதிபருக்கான பவர் தானாக துணை அதிபருக்கு சென்றுவிடும். அதன்படி உடல் பரிசோதனைக்காக ஜோ பைடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அமெரிக்க அதிபருக்கான அதிகாரம் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறுகிய காலத்திற்கான அதிகாரம் ஆகும். ஜோ பைடன் மீண்டும் வந்ததும் தானாக அவர் அதிபர் ஆகிவிடுவார். இந்த குறுகிய காலத்தில் கூட கமலா ஹாரிஸுக்கு அதிபருக்கான முழு அதிகாரமும் வழங்கப்படும். அதாவது அணு ஆயுதங்களை இயக்கும் அதிகாரம் தொடங்கி, முப்படையை கட்டுப்படுத்தும் அதிகாரம் வரை அனைத்தும் வழங்கப்படும். ஜோ பைடன் வரும் வரை வெள்ளை மாளிகையில் அதிபர் இருக்கும் வெஸ்ட் விங்கில் கமலா ஹாரிஸ் தான் இருப்பார். அமெரிக்காவின் முதல் துணை அதிபர். இப்போது குறைந்த நேரத்திற்கு அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் கமலா ஹாரிஸ் என்றும் கூட இதை வைத்து அழைக்கலாம். இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.