ரி20 உலகக்கிண்ண போட்டி – இலங்கைக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று இடம்பெற்றது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 17 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.இலங்கை அணி சார்ப்பில் குசல் பெரேரா மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காமால் 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ் மற்றும் அடம் ஷம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.அதனடிப்படையில் அவுஸ்திரேலியா அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை அடித்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வேனர் 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்தார்.பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.இன்றைய போட்டி டுபாய் விளையாட்டரங்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *