உக்ரைன் போரில் ஆயுதங்களை கணிசமான அளவுக்கு ரஷிய ராணுவம் இழந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைனை சீர்குலைக்க சக்தி வாய்ந்த ஆயுதங்கள் அதிகம் தேவைப்படுவதாக ரஷியா கருதுகிறது. இதற்காக சீனாவிடம் ரஷியா மறைமுகமாக பேச்சு நடத்தி கொண்டிருக்கிறது. ஏவுகணைகள், பீரங்கிகள் தருமாறு சீனாவிடம் ரஷியா கோரிக்கை விடுத்து உள்ளது.
இதற்கு அமெரிக்க கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. சீனா ஆயுதங்களை கொடுத்து உதவினால் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.சீனா மீதும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டிய சூழ்நிலைக்கு உலக நாடுகளும் தள்ளப்படும் என்று அமெரிக்கா கூறி உள்ளது. இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்து உள்ளது.ரஷியாவுக்கு உதவ போவதாக அமெரிக்கா வேண்டுமென்றே புரளியை கிளப்பி விடுவதாக சீனா கூறுகிறது.