மேடையில் குத்தி கொலை செய்யப்பட்ட ராப் பாடகர்

அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் கடந்த சனிக்கிழமை இரவு லைவ் நேஷன் என்ற நிறுவனம் சார்பில் ஒன்ஸ் அபான் எ டைம் என்கிற இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் அமெரிக்க ராப் பாடகர் டிரேக்கியோ தி ரூலர் மற்றும் ஹிப் ஹாப் நட்சத்திரம் ஸ்னூப் டோக் உள்ளிட்டோருடன் பாட இருந்தார். இந்நிலையில், நிகழ்ச்சி மேடையின் பின்புறத்தில் டிரேக்கியோ தி ரூலரை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை உறுதி செய்த டிரேக்கியோவின் விளம்பரதாரர் ஸ்காட் ஜாவ்சன் மேடையின் பின்புறத்தில் வாக்குவாதம் நடந்ததாகவும் கூறியுள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து இசைக் கச்சேரி சீக்கிரமாக முடித்து வைக்கப்பட்டது.அமெரிக்க ராப் பாடகர் டிரேக்கியோ தி ரூலரின் நிஜப் பெயர் டேரல் கால்டுவெல் (28). கடந்த 2015-ம் ஆண்டு ராப் பாடகராக அறிமுகமான டிரேக்கியோ, அவர் வெளியிட்ட பல பாடல்கள் பாராட்டைப் பெற்றது.2017-ம் ஆண்டு ஆயுதக் குற்றச்சாட்டிலும், 2018-ம் ஆண்டு தனது 24-வது இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கிலும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர். பிறகு, 2020-ம் ஆண்டில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில், மீண்டும் தனது இசைப் பயணத்தை தொடங்கிய நிலையில் டிரேக்கியோ கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *