உக்ரைன் நாட்டை கைப்பற்ற ரஷியா போர் தொடுத்து 43 நாட்களை கடந்துவிட்டது. ஆனாலும் இந்த சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் வீரர்களும் ஆக்ரோஷமாக போராடி வருவதால் ரஷியா திணறி வருகிறது.ரஷியா படைகள் கைப்பற்றிய நகரங்களை உக்ரைன் மீட்டு வருகிறது.இந்த போரால் உக்ரைன் நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டன. ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டனர். புச்சா நகரில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொன்று புதைக்கப்பட்டனர்.
இதில் ரஷியா மற்றும் உக்ரைன் நாட்டை சேர்ந்த வீரர்களும் உயிர் இழந்து உள்ளனர். இந்த போரின் போது ரஷிய வீரர்கள் பலரை கொன்று குவித்ததாக உக்ரைன் தெரிவித்தது. ஆனால் அதனை ரஷியா மறுத்தது.இந்தநிலையில் முதன்முறையாக உக்ரைனுடனான போரில் நிறைய வீரர்களை இழந்து விட்டோம் என ரஷியா ஒப்புதல் அளித்து உள்ளது.இதுதொடர்பாக அந்த நாட்டின் செய்தி தொடர்பாளர் கிரெம்ளின் கூறும்போது, உக்ரைன் போரில் ரஷியா படைவீரர்கள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இது எங்களுக்கு பெரிய கவலையை அளிக்கிறது எனவும் தெரிவித்து உள்ளார்.