இலங்கையில் இணை மந்திரியாக இருக்கும் ரோஷன் ரனசிங்கே, வருகிற மே மாதம் 1-ந்தேதி முதல் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதை சுட்டிகாட்டி அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். பதவி விலகுவது தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.இதுதொடர்பாக ரோஷன் ரனசிங்கே கூறும்போது, “பொருளாதார நெருக்கடிக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். உணவு பொருட்கள், எரி பொருட்களுக்காக மக்கள் வரிசையில் காத்து நிற்பது வேதனை அளிக்கிறது” என்றார்.இலங்கையில் பொருளாதார நெருக்கடி சூழல் நிலவி வரும் நிலையில் மந்திரி ஒருவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.