உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது . இந்நிலையில் அர்ஜென்டினா அணியினர் தாயகம் திரும்பினார்.அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேசிய வரலாற்று நினைவு சின்ன வளாகத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வெற்றியை கொண்டாடினர். மேலே இருந்து பார்க்கும் போது இது மக்கள் கூட்டம் தானா என சந்தேகம் படும் அளவில் இருந்தது.
You are Here
- Home
- விளையாட்டு
- உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியினருக்கு தாய் நாட்டில் உற்சாக வரவேற்பு