google.com, pub-8432884352946851, DIRECT, f08c47fec0942fa0 ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடு நீக்கம் – அமெரிக்கா அறிவிப்பு – கன்னித்தமிழ் உலகச் செய்திகள்

ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடு நீக்கம் – அமெரிக்கா அறிவிப்பு

ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.அங்கு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அண்டை நாடுகளிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 7 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் தடை விதித்தன.இதற்கிடையே, தென் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 7 நாடுகளுக்கு பயணம் செய்ய அமெரிக்காவும் தடை விதித்தது.இந்நிலையில், போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா, மொசாம்பிக், ஜிம்பாப்வே, நமீபியா, எஸ்வாடினி, லெசோதோ மற்றும் மாளவி ஆகிய 8 தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நுழைய விதித்திருந்த தடையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரத்து செய்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *