அமெரிக்காவில் பாதாள அறையில் அடைத்து வைத்து மாணவியை கற்பழித்த கொடூரன்

அமெரிக்காவின் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி திடீரென்று மாயமானார்.இதுதொடர்பாக அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அந்த மாணவியை தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னலை வைத்து அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் மாணவியின் செல்போன் நம்பரில் இருந்து குடும்ப நண்பர் ஒருவருக்கு ‘ஐ லவ் யூ’ என்ற மெசேஜ் வந்தது. பின்னர் அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.இருப்பினும் இதையடுத்து போலீசார் அந்த மாணவி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்தனர்.பிரவுன் என்பவர் வீட்டுக்குள் புகுந்து போலீசார் அவரிடம் மாணவி தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். ஆனால் ‘‘நான் மட்டும் தான் வீட்டில் உள்ளேன்’’ என்று அந்த வாலிபர் கூறினார்.அப்போது அங்கு மாணவியின் ஐ.டி. கார்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே போலீசார் வீடு முழுவதும் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையின் போது அங்குள்ள ஒரு பாதாள அறையில் மாயமான மாணவி நிர்வாணமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அந்த மாணவியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த மாணவிக்கும், பிரவுனுக்கும் இடையே இணையதள மூலம் காதல் மலர்ந்தது தெரிய வந்தது.சில நாட்களுக்கு முன்பு பிரவுன், அந்த மாணவியை நேரில் பார்க்க வேண்டும் என கூறி வீட்டுக்கு வரவழைத்தார்.அந்த சமயம் தனது ஆசைக்கு இணங்குமாறு அவர் மாணவியை வற்புறுத்தினார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரவுன் மாணவியை வலுக்கட்டாயமாக கற்பழித்தார்.சுமார் ஒரு வாரமாக அவர் பாதாள அறையில் அடைத்து வைத்து மாணவி கற்பை சூறையாடி உள்ளார். இதுதொடர்பாக போலீசார் பிரவுனை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *