பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று

Keerthy-Suresh-top-in-Twitter-2020தமிழில் பைரவா, ரஜினி முருகன், சர்க்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது 

லேசான அறிகுறிகளுடன் எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகுந்த கவனமாக இருந்தும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நான் இப்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.வைரஸ் பரவலின் வேகம் அச்சுறுத்துகிறது. தயவு செய்து அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

இதுவரைக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இதை செய்தால் மட்டுமே உங்களையும், உங்கள் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாக்க முடியும்.கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு செல்வேன்.

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன் கீர்த்தி சுரேஷ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *