பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளார்.இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மாஸ்க் டுவிட்டரில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார். முதலில் கருத்து சுதந்திரம் குறித்து பேசிய அவர், டுவிட்டர் சமூக வலைதளத்தை மகிழ்ச்சியாகவே அதிகம் பயன்படுத்துவோம் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும், கொகைனை அடைத்து வைப்பதற்காக கோகோ கோலா, மெக் டொனால்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை வாங்க போகிறேன் என்று கிண்டலாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், என்னால் அற்புதங்களை நிகழ்த்த முடியாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும், பொது நம்பிக்கைக்கு தகுதியானதாக இருக்க அரசியல் ரீதியாக டுவிட்டர் நடுநிலையாக இருக்க வேண்டும். நடுநிலையாக இருந்தால் தீவிர வலது சாரியோ, தீவிர இடதுசாரியோ கோபம்தான் அடைவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next I’m buying Coca-Cola to put the cocaine back in
— Elon Musk (@elonmusk) April 28, 2022